

காக்கா கூட்டமே காக்கா கூட்டமே
கிட்ட வராதீங்க
காய வச்ச நெல்லு மேல
வாய வைக்காதீங்க
குருவிக் கூட்டமே குருவிக் கூட்டமே
கிட்ட வராதீங்க
கூடைக்குள்ளே கூழாங்கல் இருக்குது
கிட்ட வராதீங்க
கோழிக் கூட்டமே கோழிக் கூட்டமே
கிட்ட வராதீங்க
அம்மா பார்த்தால் ஆத்திரம் கொள்வாள்
கிட்ட வராதீங்க
அணில் கூட்டமே அணில் கூட்டமே
கிட்ட வராதீங்க
அடிவாங்கி அலைய வேண்டாம்
கிட்ட வராதீங்க
அந்திக்குள்ளே உலர்ந்து போகும்
கிட்ட வராதீங்க
அதுவரைக்கும் பொறுத்திருங்க
கிட்ட வராதீங்க