

வித்தியாசம் என்ன?
இரண்டு படங்களுக்கும் இடையே 12 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
விடுகதை
1. வெள்ளை பிள்ளை கோயிலுக்குப் பூட்டு இல்லை. அது என்ன?
2. மூடிய கிணற்றில் ருசிக்கும் நீர். அது என்ன?
3. மூட்டை நிறைய இருந்தாலும், ஒரு கைப்பிடி பசியாற்றும். அது என்ன?
4. பூ பூக்கும், காய் காய்க்கும். கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
5. தொண்டை கிழியப் பேசுவான். அவன் யார்?
6. பச்சையும் வெள்ளையும் கலந்தால் சிவப்பு. அது என்ன?
7. அழகாகக் கத்தினாலும் அடுத்தவன் வீடு மேல கண்ணு. அது என்ன?
8. ஊசி போட்டு நோயைக் கொடுக்கும். அது என்ன?
9. மூன்று கண் இருந்தாலும் பார்க்க முடியாது. அது என்ன?
10. கறுப்பு தோலுக்குள் வெள்ளை பந்து. அது என்ன?
விடுகதை போட்டவர்: செ. இனிய தமிழ், 10-ம் வகுப்பு,
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி, காங்கேயம், திருப்பூர்.
நிழல் புதிர்
இந்தச் சிறுவர்களின் சரியான நிழல் எது என்பதைக் கண்டுபிடியுங்களேன்