புதிர் பக்கம் - 16/11/2016

புதிர் பக்கம் - 16/11/2016
Updated on
1 min read

வித்தியாசம் என்ன?

மேலே இருக்கும் இரண்டு படங்களுக்கும் இடையில் 15 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

விடுகதை

1. இருப்பிடத்தை விட்டு ஒரு முறை நான் வெளியே வந்தால், திரும்பிப் போக முடியாது. அது என்ன?

2. நான் ஓர் இடத்தில்தான் உட்காருவேன். ஆனால், உலகமெங்கும் ஒரே நேரத்தில் சுற்றுவேன். நான் யார்?

3. கனமழை பெய்தாலும், நான் எப்போதும் நனைய மாட்டேன். நான் யார்?

4. ஒவ்வொரு வீட்டிலும் இருப்பேன்; இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருப்பேன். நான் யார்?

5. வீட்டுக்கு மட்டுமல்ல, பலருடைய செல்வங்களுக்கும் காவல்காரன். நான் யார்?

6. உங்களுக்குப் பிடிக்காத பிடிப்பு; பிடித்தால் கை களைக் கொண்டு பிடிக்க முடியாது. அது என்ன?

7. உணவுக்கு உதவுவேன்; நீருக்கு மடிவேன். நான் யார்?

8. வீட்டுக்கு வெளியே இருக்கும்; பாதங்களைப் பாதுகாக்கும். அது என்ன?

9. தொட்டால் சத்தம் கேட்கும்; ஆனால், தொட்டுப் பார்க்க முடியாது. அது என்ன?

10. காய்கறிக் கடைகளில் கிடைக்கும் நீளப் பாம்பு. அது என்ன?

விடுகதை போட்டவர்: வே. ஜீவகன், 8-ம் வகுப்பு,
வேளாங்கன்னி பப்ளிக் பள்ளி, கிருஷ்ணகிரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in