

1. உலகப் புகழ்பெற்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர்களான லயனல் மெஸ்ஸியும் டீகோ மரடோனாவும் பெரும்பாலான போட்டிகளில் எண் 10 பொறிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்துகொண்டுதான் விளையாடியிருக்கிறார்கள்.
2. 'Decimate' என்கிற வார்த்தை 10 என்ற எண்ணிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் பத்தில் ஒரு பங்காக குறைப்பது.
3. நியான் என்கிற தனிமத்தின் அணு எண் 10.
4. பழங்காலத்தில் 10 ஆவது ஆண்டைக் கொண்டாடுபவர்களுக்குத் தகரம் அல்லது அலுமினியத்தால் ஆன பரிசு வழங்கப்பட்டது. தகரம், அலுமினியம் போன்று மகிழ்ச்சி நீடித்து நிலைக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டது.
5. குத்துச்சண்டையில் ‘நாக் அவுட்’ என்பதை 10 விநாடிகள்தாம் தீர்மானிக்கின்றன.
6. தசாப்தம் (Decade) என்பது 10 ஆண்டுகளைக் குறிக்கிறது.
7. யூதர்களும் கிறிஸ்தவர்களும் 10 கட்டளைகளைக் கடைபிடிக்கின்றனர்.
8. இங்கிலாந்தில் 10, டவுனிங் தெரு என்பது பிரதமர் அலுவலகத்தைக் குறிக்கிறது.
9. ரஷ்யப் புரட்சியின் இறுதி 10 நாள்களை விளக்கும் நூல் ‘உலகைக் குலுக்கிய 10 நாள்கள்’.
10. கிரிக்கெட்டில் இரண்டாவதாக பேட் செய்யும் எதிரணியை வீழ்த்த 10 விக்கெட்களை எடுக்க வேண்டும்.