

நீளமான ரயிலைப் பார்த்தால் குழந்தைகளுக்குக் குஷிதான். உலகிலேயே மிக நீளமான பயணிகள் ரயில் எங்கே ஓடுகிறது தெரியுமா? ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்கும் டார்வின் நகருக்கும் இடையே ஓடுகிறது. இந்த இரு நகரங்களுக்கும் இடையே ஓடும் ‘தி கான்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரயில்தான் உலகிலேயே மிக நீளமான பயணிகள் ரயில். இந்த ரயிலில் மொத்தம் 44 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ரயிலை இணைத்துச் செல்ல இரண்டு லோகோமோட்டிவ் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. ரயிலின் மொத்த நீளம் சுமார் 3,600 அடி. சுமார் 1.1 கிலோ மீட்டர் தூரம். ரயிலைத் தூரத்தில் இருந்து பார்த்தால் நீ...ளமான பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போலத் தெரியுமாம்.