

வித்தியாசம் என்ன?
மேலே உள்ள இரண்டு படங்களுக்கும் இடையில் 12 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
விடுகதை
1. உச்சியில் மூன்று கண். அது என்ன?
2. அந்தி வரும் நேரம், அவள் வரும் நேரம். யார் அவள்?
3. அவள் பாடகி. ஆனால், பெண் அல்ல. அது என்ன?
4. பார்க்க முடியாது. உணர முடியும். அது என்ன?
5. மழை வந்தால் அழகாகும் தேவதை. அது என்ன?
6. அடிக்காத பிள்ளை, அலறித் துடிக்குது. அது என்ன?
7. அண்ணன் தோட்டத்திலே பச்சை பாய் விரிந்திருக்கிறது. அது என்ன?
8. அடிக்க வந்த கூட்டம், பிடிக்கச் சொன்னா ஓடுது. அது என்ன?
9. அடிக்கடி தாவுவான்; அரசியல் வாதியல்ல. அவன் யார்?
10. அடித்தாலும், உதைத்தாலும் அழாது. அது என்ன?
விடுகதை போட்டவர்: பெ. பாலமுருகன், 5-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சோழதாசன்பட்டி, கரூர்.
நட்சத்திரப் புதிர்
இந்த ஆறு முக்கோணங்களைக் கொண்டு இந்த நட்சத்திரத்தை ஆறு நட்சத்திரங்களாக மாற்ற முடியுமா?