தெரியுமா?

தெரியுமா?
Updated on
1 min read

முள்ளுக்குள் காற்று

முள்ளம் பன்றியை நீரில் அமிழ்த்தி மூழ்கடிக்கவே முடியாது. காரணம், அதன் மேலுள்ள முட்கள். இந்த முட்களில் வெற்றிடம் நிரம்பியுள்ளது. இவை பலூன் போல முள்ளம் பன்றியை மேலே மிதக்க வைக்கத்தான் செய்யுமே தவிர மூழ்கடிக்காது.

முதல் ரயில்

உலகின் முதல் ரயில் சேவை பிரிட்டனில் 1825-ம் ஆண்டு தொடங்கியது. அன்றுதான் ஜார்ஜ் ஸ்டீவன்சன் தான் உருவாக்கிய நீராவி எஞ்சின் மூலம் ஸ்டாக்டனிலிருந்து டார்லிங்டனுக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கான முதல் ரயிலை வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார்.

சுட்ட சூரியன்

இந்தியாவில் 1956-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் அல்வார் என்ற ஊரில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவானது. 50.6 டிகிரி செல்சியஸ்! அதாவது 123.10 டிகிரி ஃபாரன்ஹீட். இப்போது வரை இந்தியாவின் அதிகபட்ச வெப்ப நிலை இதுதான்.

நாடுகளை இணைத்த பாலம்

ஒரு நாட்டையும் இன்னொரு நாட்டையும்கூடக் கடல் பாலம் வழியாக இணைத்திருக்கிறார்கள். சவுதி அரேபியாவின் கோபார் நகரையும், பஹ்ரனையும் இப்படி இணைத்திருக்கிறார்கள். 1986-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் பெயர் கிங் ஃபாஹெட் கடல் பாலம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in