உலகின் பெரிய கடல்!

உலகின் பெரிய கடல்!
Updated on
1 min read

உலகிலேயே மிகப் பெரிய கடல் எது? பசிபிக் பெருங்கடல் இல்லையா! உலகின் எல்லாக் கண்டங்களையும் சேர்த்தால் எவ்வளவு பரப்பளவு வருமோ, அதைவிட அதிக நீர்ப்பரப்பை உடையது இந்தக் கடல். வட அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா வரை பூமியின் பாதியளவுக்கு இந்தக் கடல் பரவியுள்ளது.

‘பசிபிக்’ என்றால் அமைதி, சாந்தம் என்று பொருள். பெயரில்தான் அமைதி இருக்கிறது. உண்மையில் ‘டைஃபூன்’ எனப்படும் கடல் சூறாவளிக் காற்று எப்பொழுதும் பசிபிக் பெருங்கடலில் வீசிக்கொண்டே இருக்கும். பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும். பசிபிக் பெருங்கடல் கரையோரங்களில் பெரிய பெரிய மலைகள் உள்ளன. இவற்றில் எரிமலைகள் மிகவும் அதிகம்.

இப்பெருங்கடலில் ஆயிரக்கணக்கான தீவுகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை எரிமலைகளின் உச்சிப்பகுதிகள்தான். காலநிலை மாறுபாடுகளால் அவ்வப்போது சில புதிய எரிமலைகளும் உண்டாவதுண்டு. பசிபிக் தீவுகளில் பவழப் பாறைகள் நிறைய உள்ளன. இந்தப் பெருங்கடல் எவ்வளவு பரந்ததோ அந்த அளவுக்கு ஆழமானதும்கூட.

உலகின் ஆழமான பகுதி என்றழைக்கப்படும் ‘மரியானா டிரெஞ்ச்’ என்ற பகுதியும் பசிபிக்கில்தான் உள்ளது. இது 11 கி.மீ ஆழம். பசிபி பெருங்கடலில் சாதாரணமாகப் பல இடங்கள் 9 கி.மீ. வரை ஆழமுள்ளது!

தகவல் திரட்டியவர்: எம். விக்னேஷ், 9-ம் வகுப்பு,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, அவனியாபுரம், மதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in