புதிர் பக்கம்: பட்டாசு விடுகதை

புதிர் பக்கம்: பட்டாசு விடுகதை
Updated on
1 min read

வித்தியாசம் என்ன?

மேலே இருக்கும் இரண்டு படங்களுக்கும் இடையே 12 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

வார்த்தைப் புதிர்

எழுத்து மாறிக் கிடக்கும் வார்த்தைகளை ஒழுங்குப்படுத்தி, அவை என்ன வார்த்தைகள் எனக் கண்டுபிடியுங்களேன்.

பட்டாசு விடுகதை

1. ஒரு சாண் மரத்திலே ஒரு கோடிப் பூப்பூக்கும். அது என்ன?

2. ஒரு கைப்பிடி விதை. உடனே மரமாகி, வளர்ந்து, பூப்பூத்து ஊரையே திரும்பிப் பார்க்க வைக்கும். அது என்ன?

3. ஒத்த முடிக்காரிக்குப் பெரிய கொண்டை. அது என்ன?

4. அனுமார் வால் அழகாகப் பற்றி எரிகிறது. அது என்ன?

5. புற்றில் இல்லாதவன் பற்ற வைத்தால் வருவான். அவன் யார்?

6. கால் இல்லாதவன் காடுமேடெல்லாம் சுற்றுவான். அவன் யார்?

7. கழுத்துல தீப்பிடிக்கப் பறந்த பறவை எங்கு விழுந்து சாகுமோ? அது என்ன?

8. இவனை உரசினால் வண்ண வண்ணமாய் வசை பாடுவான். அவன் யார்?

9. சின்ன சிவப்பு ரோட்டுல அடுத்தடுத்து வேகத்தடை. அது என்ன?

10. இத்தினியூண்டு சிட்டுக் குருவிக்கு எட்டுச்சுத்து பாவாடை. அது என்ன?

11. இனிமையான பேர் கொண்டவன்; வெல்லம் அல்ல. சரத்தில் இருப்பான்; பூவும் அல்ல. அவன் யார்?

12. ஒரு வீக்கம், ஒரே அடியில் உடைந்துபோகும். அது என்ன?

13. மூன்று பெயர் கொண்டவன் முனையில் கிள்ளியெறியப்படுவான் அவன் யார்?

- விடுகதை போட்டவர்: ராமன்.ஆர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in