கார்ன் ஃப்ளேக்ஸ் உருவானது எப்படி? - திலகா

கார்ன் ஃப்ளேக்ஸ் உருவானது எப்படி? - திலகா
Updated on
1 min read

சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர்களின் உணவு கொழுப்பு நிறைந்ததாக இருந்தது. இதனால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போதுதான் ஒரு தேவாலயம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு, ஆரோக்கியமான உணவு ஒன்றைத் தயாரிக்கும்படி மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜான் கெல்லாக்கிடம் கேட்டுக்கொண்டது. இவரும் இவருடைய தம்பி வில் கெய்த் கெல்லாக்கும் இணைந்து உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடையை நடத்திவந்தனர்.

ஆரோக்கிய உணவுக்காக ஊட்டச்சத்து மிக்க ரொட்டியைத் தயாரிக்க முயற்சி செய்தனர். அது ஏனோ சரியாக வரவில்லை. ஒருநாள் ரொட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவு, காய்ந்து பாத்திரத்தில் ஒட்டியிருந்தது. வில் கெல்லாக் அந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்யும்போது சருகுகள்போல் உதிர்ந்தன. அவற்றை அருகில் இருந்த சூடான பாத்திரத்தில் போட்டார். சட்டென்று பொரிந்தன. ஆச்சரியமடைந்தவர், சுவைத்துப் பார்த்தார். ஓரளவு சாப்பிடக்கூடியதாகத் தெரிந்தது. உடனே கோதுமை மாவை எடுத்து, இதேபோல் செய்து பார்த்தார்.

ஜான் கெல்லாக்கிடம் காட்டினார். அவருக்கும் பிடித்துவிடவே, வீட் ஃப்ளேக்ஸ் உருவானது. பல முயற்சிகள். பரிசோதனைகளுக்குப் பிறகு, 190ஆம் ஆண்டு கோதுமைக்குப் பதில் மக்காச்சோளத்தில் உருவான ‘கார்ன் ஃப்ளேக்ஸ்’ விற்பனைக்கு வந்தது.கெல்லாக் நிறுவனமும் உருவானது.

கெல்லாக் சகோதரர்கள் தங்கள் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த 126 ஆண்டுகளில் பல உணவுப் பொருட்களைப் புதிதாக உருவாக்கி, இன்றும் முன்னணி நிறுவனமாக இருந்துவருகிறது கெல்லாக்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in