

ஏவுகணை நாயகனே
இளைஞர்களின் தலைவனே
இராமேஸ்வரத்தின் முத்தே
இந்தியாவின் சொத்தே!
வானத்து மேகம் உன் புகழ் பேசும்
உன்னால் பெருமை கொள்கிறது தேசம்
உனது ஆற்றல் கண்டு வியக்கிறேன்
உன் மனிதநேயம் கேட்டு மெய் சிலிர்க்கிறேன்!
அக்னி சிறகுகள் நீ காட்டிய வழி
அறிவு ஊட்டுகிறது உனது பொன்மொழி
உன் சொற்பொழிவு கேட்டு மனம் உருகும்
உனது மேற்கோள் படித்து அறிவு பெருகும்!
எங்களை கனவு காணச் சொன்னவரே
உங்கள் கனவு மெய்ப்பட
உழைப்போம் என உறுதி ஏற்கிறோம்!
- வை. கவின்மதி, எட்டாம் வகுப்பு, மதுரை.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription