Published : 23 Jul 2022 03:51 PM
Last Updated : 23 Jul 2022 03:51 PM

ஷூ லேஸ் மேஜிக் - ஜி. சுரேஷ்

கைகளைப் பயன்படுத்தாமல் அவிழ்ந்த ஷூ லேஸைக் கட்ட முடியுமா என்று நண்பர்களிடம் கேளுங்கள். அவர்கள் முடியாது என்பார்கள். நீங்கள் செய்துகாட்டி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்.

என்னென்ன தேவை?

• ஷூ
• 2 ஷூ லேஸ் (ஷூ நிறத்திலேயே இருக்க வேண்டும்.)
• பெரிய நூல்

எப்படிச் செய்வது?

மேஜிக் செய்யும் முன் செய்ய வேண்டியவை:

• நூலின் நுனிப் பகுதியை ஷூ லேஸின் நடுபகுதியில் இரண்டு முடிச்சுப் போட்டுக் கட்டிக்கொள்ளவும்.
• காலில் மாட்டியிருக்கும் ஷூ லேஸைக் கட்டிக்கொள்ளவும்.
• கட்டிய ஷூ லேஸை பேண்ட்டுக்குள் மறைத்துக்கொள்ளுங்கள்.
• நூலில் கட்டிய ஷூ லேஸை இடுப்பிலிருந்து பேண்ட்டுக்குள் நுழைத்து, கால் வழியாக அதை வெளியே எடுத்துவிடுங்கள்.
• கால் வழியாக வந்த ஷூ லேஸை அவிழ்ந்ததுபோல் வைத்துக்கொள்ளுங்கள்.
• நூலின் மறு முனையை விரலால் சுற்றி, கையில் மறைத்துக்கொள்ளுங்கள்.

மேஜிக் செய்யும்போது செய்ய வேண்டியவை:

• லேஸ் அவிழ்ந்த காலைத் தூக்கி, பாதத்தை மட்டும் அசைத்துக்கொண்டே இருங்கள்.
• எல்லாரின் கவனமும் ஷூவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
• லேஸ் கட்டிய நூலின் மறுமுனையை மெல்ல இழுங்கள்.
• மறைத்து வைத்திருந்த நூலை இழுத்து முடித்தவுடன், கால் அசைப்பதை நிறுத்திவிடுங்கள்.
• பேண்ட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கட்டிய ஷூ லேஸை, உங்கள் நண்பர்களிடம் காட்டுங்கள். எல்லாரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x