

வார்த்தைத் தேடல்
உங்கள் அம்மா, அப்பா தேர்தலில் ஓட்டுப் போட்டுவிட்டு வந்திருப்பார்கள். இது பெரியவர்கள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. வளர்ந்த பிறகு நீங்களும் இப்படி ஓட்டுப்போடத்தான் போகிறீர்கள். தேர்தலில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை இப்போதிருந்தே நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? மேலே இருக்கும் எழுத்துக் குவியலில், மேலே, கீழே, குறுக்கில் தேடி தேர்தல் தொடர்பான வார்த்தைகளை கண்டுபிடியுங்கள்.
விடுகதை
1. இளமையில் உயரம். முதுமையில் கட்டை. அது என்ன?
2. உலகம் முழுவதும் சுற்றும். ஆனால் ஒரே இடத்திலேயே இருக்கும். அது என்ன?
3. நிலத்தில் முளைக்காத செடி; நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன?
4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். அவர் யார்?
5. நீரிலும் வாழும்; நிலத்திலும் வாழும். இயற்கை கொடுத்த கவசம் உயிர் காக்கும். அது என்ன?
6. முட்டையிடும்; குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும்; கூடு கட்டத் தெரியாது. அது என்ன?
7. இளமையில் பச்சை, முதுமையில் சிவப்பு, எரிச்சலூட்டும் குணம். அது என்ன?
8. கீழே வரும்; ஆனால், மேலே போகாது. அது என்ன?
9. கண் உண்டு; ஆனால், பார்க்க முடியாது. அது என்ன?
10. பார்த்தால் கல்; கல் பட்டால் தண்ணீர். அது என்ன?
விடுகதை போட்டவர்: தி. திவ்ய பிரபா
வித்தியாசம் என்ன?
இரண்டு படங்களுக்கும் இடையே 10 வித்தியாசங்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.