

கணிதத்துக்கான மிக உயரிய பரிசு ஃபீல்ட்ஸ் மெடல். நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இது 40 வயதுக்குள் இருக்கும் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டுகான ஃபீல்ட்ஸ் மெடல் நான்கு கணிதவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸைச் சேர்ந்த ஹுகோ டுமெனில் கோபின், கொரிய அமெரிக்கர் ஜூன் ஹா, பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் மேனார்ட், உக்ரைனைச் சேர்ந்த மரினா வியஸோவ்ஸ்கா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
கணிதத்துக்கு ஓர் உயர்ந்த பரிசை வழங்க வேண்டும் என்று கனடாவைச் சேர்ந்த கணிதவியலாளர் ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் என்பவரால் 1924ஆம் ஆண்டு இது முன்மொழியப்பட்டது.1936ஆம் ஆண்டு முதல், ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் பெயரில் ‘ஃபீல்ட்ஸ் மெடல்’ வழங்கப்பட்டு வருகிறது. ஃபீல்ட்ஸ் மெடல் வரலாற்றில், இதுவரை இரண்டு பெண் கணிதவியலாளர்கள் மட்டுமே பரிசைப் பெற்றிருக்கிறார்கள். ஈரானைச் சேர்ந்த மரியம் மிர்ஸாகனி 2014ஆம் ஆண்டு முதல் முறை ஃபீல்ட்ஸ் மெடலைப் பெற்றார். தற்போது மரினா வியஸோவ்ஸ்கா இரண்டாவது பெண் கணிதவியலாளராக இந்தப் பரிசைப் பெறவிருக்கிறார்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription