

கடன்கொடு கடன்கொடு என்றே
குண்டுத் தவளை கேட்கும்
தர்றேன் தர்றேன் என்று
தாவும் தவளை சொல்லும்
தகரப் பெட்டியின் மீது
தூறல் விழுந்ததைப் போல
தவளைகள் இரண்டும் அங்கே
கடனுக்காகக் கத்தும்
குறுக்கே புகுந்த பாம்பு
கணக்கைச் சரியாய்த் தீர்க்கும்
பாம்பின் வயிற்றில் சென்று
பாடம் கிடைத்தது நன்று
(மழை பெய்யும்போது தவளைகள் ஒரே குரலில் கத்துவதைக் கேட்கும் சிறுவர்கள், தவளைகள் ‘கடன்கொடு, கடன்கொடு’ என்று கேட்பதாகவும் கடன் வாங்கிய தவளைகள் ‘தர்றேன் தர்றேன்’என்று சொல்வதாகவும் கற்பனையாக அமைத்துப் பாடுவார்கள்)