நீங்களே செய்யலாம்: களிமண்ணில் கலைவண்ணம்

நீங்களே செய்யலாம்: களிமண்ணில் கலைவண்ணம்
Updated on
1 min read

களிமண்ணைப் பிடித்து விளையாட்டுப் பொருட்கள் செய்வ தென்றால் உங்களுக்குப் பிடிக்கும்தானே? புதிர் விளையாட்டு போன்ற ஓவியத்தைக் களி மண்ணில் செய்து விளையாட முயற்சி செய்து பாருங்களேன்.

தேவையானப் பொருட்கள்:

களிமண், பென்சில், பாசி மணிகள், பிளாஸ்டிக் ஸ்பூன், உங்களுக்குப் பிடித்த வண்ணம்

செய்முறை:

1 களிமண்ணை பந்து போல உருட்டிக் கொள்ளுங்கள். அதை தட்டையான மேசையில் வைத்து ஒன்று முதல் ஒன்றரை செ.மீ. தடிமனுக்குத் தேய்த்துக் கொள்ளவும்.

2 பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது பென்சில் அல்லது பெயிண்ட் பிரெஷ் பயன்படுத்தி களிமண் மீது புதிர் பாதைகளை வரையவும். பாசி மணி செல்லும் அளவுக்கு அதன் மீது அகலமான பாதையை ஏற்படுத்தவும். களிமண்ணில் வரைந்த இந்த சரியான பாதைகளுடன் தவறான வழிகளையும் வரையவும். சரியான இணைப்பு வழிகளையும் வரையவும்.

3 இப்போது களிமண்ணில் ஏற்படுத்தப்பட்ட பாதைகளை விரலால் மென்மையாக்கவும்.

4 பின்னர் களிமண்ணைக் காய வைக்கவும். இறுதியாக வரையப்பட்ட பாதைகளில் வண்ணம் பூசவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in