Published : 20 Apr 2016 12:27 PM
Last Updated : 20 Apr 2016 12:27 PM

ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த குழந்தைகள்!

சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி, கேம்லின் நிறுவனம் மற்றும் ‘தி இந்து’ நாளிதழுடன் (மாயா பஜார்) இணைந்து ‘வேல்ஸ் ஓவியப் போட்டி’யை நடத்தியது. போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற ஏராளமான குழந்தைகள் விதவிதமாக ஓவியங்களை வரைந்து அசத்தினார்கள்.

கோடை விடுமுறையின் ஒரு பகுதியாகவும், குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கவும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த ஓவியப் போட்டிக்காக கிண்டர் கார்டன் படிக்கும் குழந்தைகள் முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர் சிறுமியர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஓவியப் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 310 குழந்தைகள் பங்கேற்றார்கள். போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு படம் வரைவதற்கான அட்டை, வண்ண பென்சில்கள் ஆகியவற்றை கேம்லின் நிறுவனம் வழங்கியது.

போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு பிரிவினருக்கும் போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. முதல் பிரிவான கிண்டர் கார்டன் பிரிவுக்கு ‘என்னுடைய பொம்மை’ என்ற தலைப்பும், இரண்டாம் பிரிவான வகுப்பு 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான பிரிவினருக்கு ‘என்னுடைய பூங்கா/ என்னுடைய குடும்பம்’ என்ற தலைப்பும், மூன்றாம் பிரிவான 4 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பிரிவுக்கு ‘என்னுடைய பள்ளி / விலங்குக் காட்சி சாலை’ என்ற தலைப்பும், நான்காம் பிரிவான 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பிரிவினருக்கு ‘தூய்மை இந்தியா / பசுமை இந்தியா’ என்ற தலைப்பும் வழங்கப்பட்டன.

அந்தத் தலைப்பின் கீழ் மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் ஓவியத்தைப் போட்டி போட்டுக்கொண்டு வரைந்தார்கள். பல குழந்தைகள் மிகவும் விரைவாக ஓவியங்களை வரைந்து பொறுமையாகவும் அழகாகவும் வண்ணம் தீட்டி ஓவியத்துக்கு உயிர் கொடுத்தார்கள். பின்னர் பரிசுக்குரிய ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. போட்டித் தலைப்புக்கு ஏற்ற ஓவியம், அழகான ஓவியம், ஓவியத்தில் புதுமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x