

விடுமுறையின் உற்சாகமும் மகிழ்ச்சியும் குழந்தைகளுக்கு முக்கிய நண்பன். அப்படியொரு நண்பனாக எப்போதும் இருந்துவரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் ‘ஓகியும், கரப்பான் பூச்சிகளு’க்கும் உண்டு. இந்த விடுமுறை நாட்களில் குழந்தைகள் தங்கள் பைகள் மற்றும் புத்தகங்களைத் தூக்கி வைத்துவிட்டு கேளிக்கை நிறைந்த சிரிப்புமிக்க கார்ட்டூன் தொடர்களைப் பார்த்து ரசிக்க குழந்தைகளுக்கான புகழ்பெற்ற சோனி ஒய்.ஏ.ஒய். (Sony YAY) தொலைக்காட்சி ‘ஓகியும், கரப்பான் பூச்சிகளும்’ (Oggy and the Cockroaches), ‘ஒபோச்சமா – குன்’ (Obocchama-Kun) ஆகிய 2 புதிய கார்ட்டூன் தொடர்களைத் தமிழில் ஒளிபரப்பி அவர்களுக்கு இரட்டிப்பு விடுமுறை மகிழ்ச்சியை வழங்குகிறது.
குழந்தைகளின் விலா நோகச் சிரிக்க வைக்கும் இந்தக் கார்ட்டூன் தொடர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை முறையே மதியம் 1.30 மணி மற்றும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகின்றன. இதுமட்டுமின்றி, இந்த அனுபவத்தைத் தொலைக்காட்சிக்கு அப்பாலும் கொண்டுசெல்ல இந்த சேனல் திட்டமிட்டுள்ளது, அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள இளம் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் கதைகள் உயிர்ப்புடன் இருப்பதைக் காணும் வாய்ப்பை வழங்குகிறது. இதை நிரூபிக்கும் வகையில் அவர்களுக்காக நேரடியாக உற்சாகமான கள நிகழ்ச்சிகளையும் விரைவில் வழங்க இருக்கிறது.
இந்த வேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்த சிறப்பு வேன் ஒன்றையும் இந்தத் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதில் குழந்தைகளுக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நண்பர்கள் அவர்களை நேரடியாகச் சந்தித்து அற்புதமான விளையாட்டுகளை அவர்களுக்காக வழங்க இருக்கிறார்கள். மேலும் இதில் ‘ஓகியும், கரப்பான் பூச்சிகளும்’, ‘ஒபோச்சமா – குன்’ ஆகிய நிகழ்ச்சிகளின் முன்னோட்டமும் இடம் பெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
அத்துடன் இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் கதாபாத்திரங்களைப் பற்றிய வினாடி வினா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ஏராளமான பரிசுகளையும் சோனி ஒய்.ஏ.ஒய். தொலைக்காட்சி வழங்கவிருக்கிறது. சிறப்புச் சுவர் ஓவியங்கள் மற்றும் 'ஓகியின் நம்பிக்கை மரம்' மூலம் கோயம்புத்தூர் தெருக்களில் இந்தத் தொலைக்காட்சி தனது கொண்டாட்டங்களைப் பெரிய அளவில் காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த மரத்தின் மூலம், நகரத்தில் உள்ள குழந்தைகளுக்கான நம்பிக்கையின் செய்தியை ஓகி குறிக்கிறது. மேலும் தேவைப்படும் குழந்தைகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தையும் சிரிப்பையும் கொண்டு வர அவர்களை ஊக்குவிக்க இருக்கிறது.