

# உங்களைச் சுற்றி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சிற்றெறும்புகளைக் கவனித்திருக்கிறீர்களா? மற்ற பூச்சிகளைப் போலவே எறும்புகளுக்கும் ஆறு கால்கள்தான்.
# எறும்புகளின் கால்கள் மிகவும் வலிமையானவை. அதனால்தான் அவை மிக வேகமாக ஓடுகின்றன. எறும்புகளால் தங்களைவிட அதிகபட்சமாக ஐம்பது மடங்கு அதிமான எடையைத் தூக்க முடியும்.
# எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒரு வயிற்றில் தங்களுக்கான உணவையும், மற்றொரு வயிற்றில் பிற எறும்புகளிடம் பகிர்ந்துகொள்வதற்கான உணவையும் வைத்துக்கொள்ளும்.
# உலகம் முழுவதும் 10,000 வகையான எறும்பு இனங்கள் உள்ளன. சில எறும்பு காலனிகளில் ஏழு லட்சத்துக்கு அதிகமான எறும்புகள்கூட வாழ்கின்றன. ஓர் எறும்பின் சராசரி ஆயுள்காலம் 45 நாட்களிலிருந்து 60 நாட்கள்தான்.