

டியூகாங் என்ற கடல் வாழ் விலங்கைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது கடலில் வாழும் பாலூட்டி. மலாய் மொழியில் உள்ள டியூங் என்ற சொல்லிலிருந்து ‘டியூகாங்’ உருவானது. ‘டியூங்’ என்றால் ‘கடல் கன்னி’ என்று அர்த்தமாம். தமிழில் இதை ஆவுளியா என்றழைப்பார்கள். ஒன்பது அடி நீளம்வரை வளரக்கூடியது.
டியூகாங்குகள் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் ஷார்க் குடா, மோர்டன் குடா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. மற்ற கடல்வாழ் உயிரினங்கள்போல் அல்லாமல், கடல் தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் சுத்த சைவம் இது. கடல் நீரில் வாழ்ந்தாலும், தண்ணீர் குடிக்க நன்னீரைத் தேடிப் போகுமாம்.
தற்போது இந்த விலங்கு அழியும் நிலையில் உள்ளது. மனிதர்களால் டியூகாங்குக்கு ஏற்படும் ஆபத்து மட்டுமல்லாமல் சுறா மீன், திமிங்கலம், முதலை போன்ற நீர்வாழ் உயிரினங்களின் வேட்டையாலும், புயல் போன்ற இயற்கைச் சீற்றத்தாலும் டியூகாங் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
தகவல் திரட்டியவர்: மு. முருகராஜ், 9-ம் வகுப்பு,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, பள்ளிப்பட்டு.