ரயிலைக் குலுக்காத கற்கள்!

ரயிலைக் குலுக்காத கற்கள்!
Updated on
1 min read

ரயில் தண்டவாளத்தில் கருங்கல் ஜல்லிகளைக் கொட்டி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஏன், இப்படிக் கருங்கல் ஜல்லிகளைக் கொட்டியிருக்கிறார்கள் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் அதிக எடை கொண்டவையாக இருக்கும். அது மட்டுமல்ல, ரயில் வண்டிகள் மிகவும் வேகமாகப் போகும். அப்படி வேகமாகப் போகும்போது அழுத்தம் அதிகமாகும். அந்த அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு, தண்டவாளங்களின் மீது ரயில்கள் பாதுகாப்பாகப் போக கருங்கல் ஜல்லிகள் உதவுகின்றன.

ஸ்லீப்பர் கட்டைகளுக்கிடையே அடைத்து வைக்கப்பட்ட இந்தக் கற்கள், ரயில் வண்டிகளால் உண்டாகும் குலுங்கலையும், அதிர்ச்சிகளையும்கூடத் தாங்கிக்கொள்ளும். ரயில் வேகமாகச் சென்றாலும் பெரிதாக எந்தக் குலுங்கலும் இல்லாமல் போக கருங்கல் ஜல்லிகளே காரணம்.

கருங்கல் ஜல்லிகள் கிடைக்காத சில நாடுகளில் இறுகிப்போன எரிமலை லாவா (சாம்பல்) கற்களை ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்துகிறார்கள்.

தகவல் திரட்டியவர்: தி. ஜெய் ஆகாஷ், 6-ம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in