Published : 17 Feb 2016 11:00 AM
Last Updated : 17 Feb 2016 11:00 AM

நீங்களே செய்யலாம்: காகிதப் பறவை

பறவைகள் வானத்தில் பறப்பதைப் பார்த்து மகிழ்ந்திருப்போம். நமக்கே நமக்கு என ஒரு பறவை இருந்தால் நன்றாக இருக்குமில்லையா? ஒரு காகிதப் பறவையை நாமே ஏன் செய்து பார்க்கக் கூடாது?

தேவையான பொருட்கள்:

# காகிதம்

# கத்தரிக்கோல்

# பசை

# மணிகள்

செய்முறை:

# காகிதத்தைச் சுருட்டி ஒட்டிக்கொள்ளவும்.

# படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் முக்கோண வடிவில் காகிதத்தை வெட்டவும்.

# முக்கோணக் காகிதத்தை லேசாக மடிக்கவும். இப்போது பறவையின் முகம் தயார்.

# இறக்கைக்கு, ஒரு அங்குலக் காகிதத்தை இரண்டாக வெட்டித் தனியாக ஒட்டிவிடவும்.

# கண்களுக்குக் கண் மணிகளை ஒட்டவும்.

# இப்போது, மீதமுள்ள காகிதத்தைச் சம இடைவெளியில் வெட்டவும். இதுவே பறவையின் சிறகுத் தொகுதி

# நீங்கள் இதை இன்னும் அழகாகச் செய்ய முடியும்.

# மேலும் அழகுபடுத்த உங்களுக்குப் பிடித்த வண்ணத்தை அடித்துக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x