

பச்சை வண்ணக் கிளியக்கா
பட்டுப் போன்ற கிளியக்கா!
பவழச் சிவப்பு அலகாலே
கொஞ்சிப் பேசும் கிளியக்கா!
ஆல மரத்தில் ஆலம்பழம்
கொத்தித் தின்னும் கிளியக்கா!
தென்னை மரக் கீற்றிலே
ஊஞ்சல் ஆடும் கிளியக்கா!
பச்சை மிளகாய் தந்தாலும்
பாங்காய் உண்ணும் கிளியக்கா!
கொட்டைகள் சில கிடைத்தாலும்
உடைத்துத் தின்னும் கிளியக்கா!
வயலில் இறங்கி நெல்மணிகள்
கொறித்துத் தின்னும் ஆசையிலே
வானில் கூட்டம் கூட்டமாய்ப்
பறந்தே வருவாய் கிளியக்கா!
அங்கும் இங்கும் தொலைவிலே
பார்த்த உனது அழகெல்லாம்
அருகில் நாங்கள் பார்க்கணும்
நெருங்கி வாயேன் கிளியக்கா!