

‘லிட்டில் பெட்ரா’ குகை உலகளவில் மிகப் பிரபலம். பிரம்மாண்டமான மலையைக் குடைந்து, குகையாக மாற்றி அதில் அழகான ஓவியங்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வரைந்திருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த நபாடீன்ஸ் என்ற மக்கள் இவற்றை வரைந்ததாகச் சொல்கிறார்கள். கிரேக்கப் பாணியில் வரையப்பட்டுள்ளன இந்தச் சுவர் ஓவியங்கள்.
பெட்ரா என்னும் இந்த இடம், ஜோர்டான் நாட்டில் சாக்கடலுக்கும் அகாபா வளைகுடாவுக்கும் இடையில் உள்ளது. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் ‘பாறை’ என்று அர்த்தம். நான்கு பக்கமும் பாறைகள் சூழ்ந்திருக்க, நடுவில் இந்த இடம் இருப்பதால் இதற்கு பெட்ரா என்று பெயர் வந்தது. இந்தச் சுற்றுப்புற மலைகளின் உயரம் சுமார் 600 அடி.
2007-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் அமைப்பு வெளியிட்ட புதிய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் பெட்ராவும் இடம்பெற்றுள்ளது.
தகவல் திரட்டியவர்:
பி. வர்ஷினி, வித்யவிகாஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, காரமடை.