

கிராமங்களில் வீட்டில் வளர்க்கும் கழுதைகளைப் பார்த்திருப்பீர்கள். பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். காட்டுக் கழுதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஆப்ரிக்காவில் காட்டுக் கழுதைகள் நிறைய உள்ளன. இவற்றை ‘சோமாலியக் கழுதைகள்’ என்று சொல்கிறார்கள். பார்ப்பதற்குப் பழுப்பும் வெள்ளையும் கலந்த வழக்கமான கழுதைகள் போலவே தெரியும். ஆனால், வரிக்குதிரைகளைப் போல இந்தக் கழுதைகளின் கால்களில் காணப்படும் அழகான வரிகள் இவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டும். சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா போன்ற நாடுகளில் இந்தக் காட்டுக் கழுதைகள் நிறைய உள்ளன.
இந்த நாடுகளை அடிக்கடி பஞ்சம் தாக்கும் என்பதால் உணவுக்கும் தண்ணீருக்கும் பல நாட்கள் திண்டாட்ட மாகவே இருக்கும். அதன் காரணமாக இந்த இனம் வேகமாக அழிந்து வருகிறது. காட்டுக் கழுதைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் இருக்கும் என்கிறார்கள் காட்டுயிர் ஆர்வலர்கள்.
தகவல் திரட்டியவர்:
எல். சோமு, 7-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஆண்டிப்பட்டி.