

சின்னஞ்சிறுவனாக இருந்தபோது ஜவஹர்லால் நேருவுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவது என்றால் கொள்ளைப் பிரியம். தினந்தோறும் இப்படிக் கொண்டாடினால் என்ன என்று நினைப்பாராம். ஆனால், வளர்ந்த பிறகு பிறந்த நாள் கொண்டாடும் நாட்டம் நேருவுக்குக் குறைந்தது.
நேரு பிரதமரான பிறகு, நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாகப் பிறந்த நாள் கொண்டாட நேரு சம்மதித்தார். நண்பர்கள் உற்சாகமாக ஏற்பாடு செய்தார்கள். கேக்கை எடுத்து வந்து நண்பர்கள் மேசையில் வைத்தார்கள். நேருவும் அங்கே வந்துவிட்டார். வாழ்த்து சொன்ன நண்பர்கள், கேக் வெட்டும்படி நேருவைக் கேட்டுக் கொண்டார்கள். கத்தியைக் கையில் கொடுத்தார்கள்.
கேக்கைப் பார்த்ததும் நேரு பதறிபோய்விட்டார். ஏன் தெரியுமா? கேக் இந்தியாவின் வடிவத்தில் இருந்தது. அதைப் பார்த்துதான் நேரு பதறினார். “ இந்தியாவைத் துண்டாடுவதா?, முடியாது. கேக் வடிவத்தில்கூட இதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது” என்று கூறி விட்டாராம்.
தகவல் திரட்டியவர்: ஆர். வளர்மதி, 10-ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.