நீங்களே செய்யலாம்: காகித பரிசுப் பெட்டி

நீங்களே செய்யலாம்: காகித பரிசுப் பெட்டி
Updated on
1 min read

உங்கள் நண்பர்களின் பிறந்த நாளுக்குப் பரிசு கொடுக்க ஆசையா? அப்போ, காகித பரிசுப் பெட்டி செய்து தரலாமே. வண்ணக் காகிதம் இருந்தால் போதும், அழகான காகிதப் பரிசுப் பெட்டியைச் செய்துவிடலாம்.

என்னென்ன தேவை?

பஞ்ச் மெஷின், நூல், வண்ணக் காகிதம், கத்தரிக்கோல், பென்சில், ஸ்கேல்.

எப்படிச் செய்வது?

# படத்தில் காட்டியபடி வண்ண காகிதத்தில் வரைந்துகொள்ளுங்கள். (நடுவில் சதுரத்தை வரையுங்கள். சதுரத்தின் நான்கு மூலைகளிலும் முக்கோணம் வரையுங்கள். பின்னர் முக்கோணத்தைச் சுற்றி அரை வட்டம் வரையுங்கள்)

# வரைந்த அந்தப் பகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

# முக்கோணத்தின் மூலையில் பஞ்ச் மெஷினைப் பயன்படுத்திக் காகிதத்தில் துளையைப் போடுங்கள்.

# இப்போது படத்தில் காட்டியுள்ளதுபோலக் காகிதத்தை மடியுங்கள்.

# மடித்துவிட்டீர்களா? இப்போது முக்கோணங்களை ஒன்றாகச் சேர்த்து, துளைகளின் உள்ளே நூலைச் செருகி முடிச்சு போட்டுவிடுங்கள்.

அழகான பரிசுப் பெட்டி தயாராகிவிட்டது. இந்தப் பரிசுப் பெட்டியை உங்கள் நண்பர்களுக்குக் கொடுத்து மகிழுங்கள்.

படங்கள்: மோ.வினுப்பிரியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in