பூமிக்கடியில் விசித்திர அருவி!

பூமிக்கடியில் விசித்திர அருவி!
Updated on
1 min read

அருவி எப்படி இருக்கும்? உயரமான மலையிலிருந்து தண்ணீர் கீழே கொட்டும் இல்லையா? ஆனால், அமெரிக்காவில் பூமிக்கு அடியில் ஒரு அருவி இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்த அருவி டென்னஸி, சாட்டானோகா என்ற இரு இடங்களுக்கு அருகே அமைந்துள்ள லுக்கவுட் மலைக் குகையில் உள்ளது. இந்த அருவியை ரூபி அருவி என்று அழைக்கிறார்கள். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சுண்ணாம்புப் பாறைகள் உப்பு நீரால் அரிக்கப்பட்டு, இந்த மலைக் குகை உருவானது.

சரி, இந்த அருவி எப்படி உருவானது? இந்த அருவி மழைக்காலத்தில் மழை நீரின் காரணமாக உருவாகியிருக்கலாம் எனச் சொல்கிறார்கள். குகைக்குள் 120 அடியில் இருந்து கீழ்நோக்கித் தண்ணீர் விழுகிறது. பின்னர் மலையின் வழியே ஓடி டென்னஸி ஆற்றில் கலந்துவிடுகிறது. இந்தக் குகைக்குச் செல்ல நூறாண்டுகளுக்கு முன்பு வழி எதுவும் கிடையாது.

இந்தக் குகைக்குச் செல்ல லியோ லாம்பெர்ட் என்பவர் 1928-ம் ஆண்டில் பாதையை ஏற்படுத்தினார். அப்போதுதான் இந்த அருவி உலகுக்குத் தெரிய வந்தது. இப்போது அமெரிக்காவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக இது மாறிவிட்டது.

தகவல் திரட்டியவர்:
ரம்யா, 9-ம் வகுப்பு,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
விழுப்புரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in