Last Updated : 14 Oct, 2015 11:23 AM

 

Published : 14 Oct 2015 11:23 AM
Last Updated : 14 Oct 2015 11:23 AM

பழைய பாடல் - புதிய கதை: பயத்தை உதறிய ஜாக்கும் ஜில்லும்

ஜாக் என்றொரு சிறுவன், ஜில் என்ற சிறுமி. இருவரும் அண்ணன், தங்கச்சி, அவர்களுடைய வீடு ஒரு குன்றின் அடிவாரத்தில் இருந்தது. அவர்களுடைய அம்மா, “குன்றின் உச்சியில் இருக்கும் கிணற்றுக்குப் போய்த் தண்ணீர் எடுத்துவந்து உதவ முடியுமா” என்று கேட்டார்.

ஜில் உடனே, “நான் போகிறேன், நான் போகிறேன்” என்று வேகமாக வாளியை எடுக்க ஓடினாள். அவள் இன்னும் பெரியவளாக வளரவில்லை, குட்டிப் பெண்.

“ஜில், நீ மட்டும் தனியாகப் போக வேண்டாம். அண்ணன் ஜாக்கையும் கூட்டிக்கொண்டு போ” என்று அம்மா சொன்னார்.

உடனே, ஜாக்கும் வாளியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். இருவரும் மெதுமெதுவாகக் குன்றின் உச்சியில் உள்ள கிணற்றைச் சென்றடைந்துவிட்டார்கள்.

கிணற்றின் தண்ணீர் நிறைந்த வாளி கட்டப்பட்டிருந்த கப்பிக் கயிற்றைப் பிடித்து இழுக்க, ஜில்லும் உதவினாள். கிணற்றில் தண்ணீர் இறைத்தாகிவிட்டது.

இரண்டு பேரும் கஷ்டப்பட்டுத் தாங்கள் கொண்டுவந்த வாளியில் தண்ணீரை ஊற்றினார்கள். இருவரும் சேர்ந்து வாளியைத் தூக்கிக்கொண்டு குன்றிலிருந்து கீழே இறங்குவது கஷ்டமில்லையா?

அதனால், “நானே வாளியைத் தூக்கி வருகிறேன்” என்று ஜாக் சொன் னான். அவனுக்கு முன்னால் ஜில் நடந்து போனாள். ஆனால், ஜாக் தனி ஆளாகத் தண்ணீர் நிறைந்த வாளியைக் கஷ்டப்பட்டுத் தூக்கிவந்தான். கீழே இருந்த சிறு கல் தடுக்கித் திடீரென்று விழுந்தான். அவனுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ஜில்லும், அதனால் உருண்டு கீழே விழுந்தாள். ஜாக்குக்குத் தலையில் கல் கீறிச் சிறிதாகக் காயம் ஏற்பட்டது. லேசாக ரத்தம் வந்தது.

“அச்சச்சோ, அண்ணா ரத்தம் வருது, வா சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்” என்றாள் ஜில். காயத்தைக் கையால் தொட்டுப் பார்த்தான் ஜாக். “சின்னக் கீறல்தான். இதற்கெல்லாமா அம்மாவிடம் போவது. அம்மாவுக்கு இப்போ காய்ச்சல் அடிக்கிறது. அதனால்தானே, நம்மைத் தண்ணீர் எடுத்துவரச் சொன்னார். தண்ணீர் இல்லையென்றால் வீட்டு வேலை எதுவும் நடக்காது. பயப்படாதே ஜில், திரும்பவும் போய்த் தண்ணீர் கொண்டு வருவோம்” என்றான் ஜாக்.

அப்போது அவர்கள் கீழே விழுந்து கிடந்த இடத்திலிருந்து ஜாக் நிமிர்ந்து பார்த்தான். பக்கத்தில் ஒரு நாய்க்குட்டி எலும்புத் துண்டைத் தேடிக்கொண்டிருந்தது. பல இடங்களில் மோப்பம் பிடித்துத் தோண்டி பார்த்த பிறகும், அதற்கு எலும்புத் துண்டு கிடைக்காமல் இருந்தது. அங்கே நிறைய குழிகள் இருந்தன. ஆனால், நாயின் வாயிலோ எலும்பு இல்லை. ஆனாலும் விடாமல் இன்னொரு இடத்தில் ஆழமாகத் தோண்டிக்கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு எலும்புத் துண்டைக் கண்டுபிடித்து, அதை வாயில் கவ்வி சென்றது.

நம்பிக்கையுடன் முயற்சித்தால், நம்மால் முடியாதது எதுவுமில்லை, நினைக்கும் எந்த விஷயத்தையும் செய்துகாட்டலாம். அதை செய்வதற்கு என்று ஒரு வழி இருக்கும். அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் குழி தோண்டி எலும்புத் துண்டைக் கண்டறிந்த நாயைப் போல, மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்க்க வேண்டும். நாம் நினைத்ததை நிச்சயமாகச் செய்துவிட முடியும் என்பதை ஜாக் புரிந்துகொண்டான்.

அதன்பிறகு ஜாக் நம்பிக்கையுடன் குன்றில் ஏற ஆரம்பித்தான். “பயப்படாமல் வா, கீழே விழாமல் தண்ணீர் எடுத்து வருவோம்” என்று ஜில்லை மீண்டும் கிணற்றுக்கு அழைத்தான். தான் விழுந்து கிடந்த மரத்துக்கு அடியில் ஒரு சிறு எறும்பு தன்னைப் போலப் பல மடங்கு எடையுள்ள உணவுத் துணுக்கைத் தூக்கி செல்வதை ஜில் பார்த்தாள்.

அதன்பிறகு ஜாக் நம்பிக்கையுடன் குன்றில் ஏற ஆரம்பித்தான். “பயப்படாமல் வா, கீழே விழாமல் தண்ணீர் எடுத்து வருவோம்” என்று ஜில்லை மீண்டும் கிணற்றுக்கு அழைத்தான். தான் விழுந்து கிடந்த மரத்துக்கு அடியில் ஒரு சிறு எறும்பு தன்னைப் போலப் பல மடங்கு எடையுள்ள உணவுத் துணுக்கைத் தூக்கி செல்வதை ஜில் பார்த்தாள்.

ஜில்லின் மனதிலிருந்த தயக்கம் குறைந்தது. அண்ணன் சொல்வதைக் கேட்டு, ஜில்லும் தைரியமாகப் பின்னாலேயே குன்றில் ஏறினாள். தண்ணீர் கொண்டபோனால்தானே அம்மாவால் வேலையை முடிக்க முடியும். இந்த நாயும் எறும்பும் செய்வதைப் போல, தாங்களும் முயற்சித்தால் அம்மாவுக்குத் தண்ணீர் எடுத்து வந்துவிட முடியும் என்று இருவரும் நம்பினார்கள்.

இருவரும் சேர்ந்து முழு வாளிக்குப் பதிலாக, பாதி வாளி தண்ணீரையே நிரப்பினார்கள். அதன் எடை அதிகமாக இல்லாததால், ஜாக் தனி ஆளாகவே தூக்கி வர முடிந்தது. கவனமாகவும் மெதுவாகவும் அவன் நடந்துவந்தான். இன்னொரு வாளியில், அதைவிட குறைவான நீரைத் தன்னாலும் தூக்கி வர முடியும் என்று ஜில் நினைத்தாள். அடுத்த முறை அப்படிச் செய்ய வேண்டும் என அவள் மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். அவர்களுடைய அம்மா இருவரையும் பாராட்டினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x