வீட்டைக் காக்கும் விநோத பாம்பு!

வீட்டைக் காக்கும் விநோத பாம்பு!
Updated on
1 min read

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், டென்மார்க் நாட்டில் உள்ள ஒரு பாம்பைக் கண்டால் திருடர்கள் நடுங்குகிறார்கள். வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்தது தெரிந்தால், மோப்பம் பிடித்து விடுகிறது ஒரு கெட்டிக்காரப் பாம்பு. உடனே அங்கே போய்த் திருடர்களை உண்டு, இல்லையென செய்துவிடுகிறது அது. அப்படிச் செய்வதற்கு இந்தப் பாம்பு எப்படிக் கற்றுக்கொண்டது என்றுதானே கேட்கிறீர்கள்? இது நிஜப் பாம்பு இல்லை. ரோபோ பாம்பு!

டென்மார்க்கைச் சேர்ந்த பொம்மை தயாரிப்பு நிறுவனமான ‘லீகோ’ இந்தப் பாம்பைத் தயாரித்து விற்கிறது. இந்த ரோபோ பாம்பை ஐபோன், ஐபாட் மூலம் வீட்டிலேயே இயக்கலாம். பாம்பின் கண் பகுதியில் அகச்சிவப்புக் கதிர் சென்ஸர் ஒன்று உள்ளது. இந்தச் சென்ஸர் மூலம் திருடர்களை அறிந்து, தாக்குதல் நடத்துகிறது பாம்பு. பற்களைப் போன்ற கூர்மையான அமைப்பு ஒன்றும் அதன் வாயில் பொருத்தப்பட்டுள்ளது. உடலின் அடியில் சக்கரமும் உள்ளது. இதைத் துணையாகக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் ரோபோ பாம்பு வேகமாகச் சென்றுவிடுகிறது!

ரோபோ பாம்பை அவ்வப்போது மின்சாரத்தில் சார்ஜ் ஏற்றினால் போதும். 24 மணி நேரமும் வீட்டைக் காக்கும் காவலனாக இருக்கும்.

தகவல் திரட்டியவர்: ஜெ. ஜோசுவா பாரதி,
6-ம் வகுப்பு, ஜவஹர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி,
அசோக் நகர், சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in