கலாமைக் கொண்டாடுவோம்: ஓவியப் போட்டி முடிவுகள்

கலாமைக் கொண்டாடுவோம்: ஓவியப் போட்டி முடிவுகள்
Updated on
1 min read

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி ‘கலாமைக் கொண்டாடுவோம்’ ஓவியப் போட்டியை அறிவித்திருந்தோம். அப்துல் கலாமின் ஓவியங்களை குழந்தைகள் விதவிதமாக அனுப்பி எங்களைத் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். எதை எடுப்பது, எதை விடுவது என்று திணறுமளவுக்கு ஒவ்வொரு ஓவியமும் அருமையாக இருந்தன.

ஓவியங்கள் பல சுற்றுகளாகப் பிரிக்கப்பட்டன. பரிசுக்குரிய ஓவியங்களைச் சென்னையைச் சேர்ந்த ஓவியர் லலிதா தியாகராஜன் தேர்வு செய்தார். போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் பாராட்டுகளும் நன்றியும். ஓவியப் போட்டியில்

ரூ. 5,000 மதிப்புள்ள சென்னை மொபைல்ஸ் வழங்கும் பரிசுக் கூப்பனை வென்ற இரு குழந்தைகள்:

ரா. மதுமிதா, 4-ம் வகுப்பு, பாரதிய வித்யாபவன் பள்ளி, ஆர்.எஸ்.புரம், கோயமுத்தூர்.

எஸ். புவனேஷ், 4-ம் வகுப்பு, டி.எம்.ஹெச்.என்.யு. வித்யாலயா பள்ளி, பெரியகுளம், தேனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in