அப்துல் கலாம்: குழந்தைப் பாடல்

அப்துல் கலாம்: குழந்தைப் பாடல்
Updated on
1 min read

அப்துல் கலாம்

தமிழகம் தந்த தங்க மகன்

தரணியில் புகழை வென்ற மகன்

அறிவியல் வித்தகம் கொண்ட மகன்

அப்துல் கலாம் என்ற மகன்

ஏழைக் குடும்பத்தில் உதித்தாலும்

ஏழ்மைக்கு அஞ்சா தீர மகன்

கற்றவர் உயர்வர் என்றுணர்ந்து

கல்வியில் கருத்தாய் நின்ற மகன்

விமானம், ராக்கெட் என்று பல

விண்வெளி சாதனை புரிந்த மகன்

தாய்த்திரு நாட்டைக் காத்திடவே

ஏவுகணை பலவும் கண்ட மகன்

ஆராய்ந்து அறியும் அறிவாலே

ஊக்கம் குறையா உழைப்பாலே

குடியரசுத் தலைவர் என்கின்ற

உயர்ந்த பதவி பெற்ற மகன்

எட்டாத புகழை அடைந்தாலும்

எளிமையில் மாறா நல்ல மகன்

திருக்குறள் அருமை பெருமைகளை

எங்கும் எடுத்துச் சொன்ன மகன்

மரங்கள் நடுவோம் வாவென்று

மனிதர் கரத்தைச் சேர்த்த மகன்

மாதிரி நாடாக பாரதத்தை

மாற்றிட யோசனை கொண்ட மகன்

குழந்தைகள் மீது எப்போதும்

அக்கறை காட்டும் நல்ல மகன்

காணும் கனவுகள் நிச்சயமே

வெற்றி உண்டென சொன்ன மகன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in