

சின்னச் சின்ன எறும்பு
சிவப்பு வண்ண எறும்பு
சொல்லித் தரும் பாடத்தைக்
கற்றுக் கொள்ள விரும்பு!
வரிசை ஒன்றை அமைத்து
ஒழுக்கமாகச் செல்லும்!
வழியில் தடைகள் வந்தால்
புதிய வழியைக் காணும்!
உணவு இருக்கும் இடத்தை
இரவும் பகலும் தேடும்!
மழைக்கு முன்பே அவற்றை
தம்மிடத்தில் சேர்க்கும்!
காயம் பட்ட எறும்பைத்
தோளில் தூக்கிச் செல்லும்
உறைவிடத்தில் சேர்த்து
அரவணைத்துக் காக்கும்!
உருவில் சிறிய எறும்பின்
நற்குணங்கள் பலவாம்!
அவற்றை கற்றுக் கொண்டால்
நமக்கும் உண்டு உயர்வாம்!