நீங்களே செய்யலாம்: சுழற்றி அடிக்கும் காற்றாடி

நீங்களே செய்யலாம்: சுழற்றி அடிக்கும் காற்றாடி
Updated on
1 min read

வெளியூருக்கு ரயிலிலோ, பஸ்ஸிலோ போகும்போது பெரிய கோபுரத்தில் பெரிய விசிறி சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்காக அந்தப் பெரிய விசிறியை வைத்திருப்பார்கள். அதேபோன்ற ஒரு காற்றாலையை வீட்டிலேயே செய்வோமா?

தேவையான பொருட்கள்:

காகிதம்

பசை

கத்தரிக்கோல்

தடித்த நூல்

பென்சில் அல்லது குச்சி

செய்முறை :

ஒரு காகிதத்தைச் சதுரமாக வெட்டி எடுத்துகொள்ளுங்கள்.

அந்தக் காகிதத்தின் நான்கு மூலைகளிலும் படத்தில் காட்டியதை போல ஒரே அளவில் வெட்டிக்கொள்ளுங்கள்.

பிறகு, காகிதத்தின் நடுவில் பசையை தடவிக்கொள்ளுங்கள்.

படத்தில் காட்டியதை போல், வெட்டிய நான்கு மூலைகளையும் சதுரம் வருவதுபோல மடியுங்கள். சதுரத்தின் நடுவில் பசையைக் கொண்டு ஒட்டிக் காய விடுங்கள்.

காகிதத்தின் மத்தியில் ஒரு துளையை இடுங்கள்.

ஒரு நூலை எடுத்து, அதன் மூலையில் ஒரு முடிச்சுபோடுங்கள். அதை அந்த ஒட்டை வழியே நுழையுங்கள்.

இப்போது, நூலின் மற்றொரு பகுதியை பென்சில் அல்லது குச்சியில் கட்டிவிடுங்கள்.

இப்போது உங்களுக்குக் காற்றாலை ஒன்று கிடைத்து விட்டதா? அதை இன்னும் அழகுப்படுத்த அதன் நடுவில் பொத்தான்களை ஒட்டிக்கொள்ளுங்கள்.

படங்கள்: மோ.வினுப்பிரியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in