

வீட்டில் தேவையில்லாத ஸ்டிராக்களைப் (உறிஞ்சு குழல்) பயன்படுத்தி அழகான பொம்மைப் பதக்கம் செய்யலாம் தெரியுமா? செய்து பார்க்கத் தயாராகிவிட்டீர்களா?
என்ன தேவை?
ஸ்டிரா (உறிஞ்சு குழல்)
குண்டுமணி
சங்கிலி அல்லது நூல்
கத்தரிக்கோல்
பசை
எப்படிச் செய்வது?
உறிஞ்சு குழலை எடுத்துக்கொள்ளுங்கள். அதைச் சம இடைவெளியில் வெட்டுங்கள்.
வெட்டிய ஒவ்வொரு துண்டையும் பசையைக்கொண்டு இணைத்து ஒட்டுங்கள்.
நடுவில் குண்டுமணிகளை ஒட்டிக்கொள்ளுங்கள். இப்போது அழகான பதக்கம் தயாராகிவிட்டதா?
நூல் அல்லது சங்கிலியை எடுத்து முதல் உறிஞ்சு குழலில் நுழைத்து, முனைகளை முடிச்சு போடுங்கள்.
இப்போது, நீங்களே செய்த ஒரு அழகான பொம்மைச் சங்கிலி கிடைத்துவிட்டதா? இந்தப் பொம்மைப் பதக்கம் இன்னும் அழகாக இருக்க வேண்டுமா? அப்படியானால், ஒரே வண்ண உறிஞ்சு குழலைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்திப் பாருங்கள்!