

பிரபஞ்ச வரலாறு, பூமியின் வரலாறு, நாட்டின் வரலாறு, அரசர்களின் வரலாறு, தலைவர்களின் வரலாறு என்று எல்லாம் படித்திருப்போம். நம் வீட்டின் வரலாற்றை தெரிந்து வைத்திருக்கிறோமா? தாத்தா, பாட்டி வரை ஓரளவு விஷயம் அறிந்து வைத்திருப்பீர்கள். தாத்தா, பாட்டியின் அம்மா, அப்பா கூட நமக்குத் தெரியாது. இந்த விடுமுறையில் குடும்ப வரலாற்றைத் தெரிந்துகொள்வோமே!
குடும்பத்தோடு அமர்ந்து ஒரு வெள்ளைத் தாளில் ஃபேமிலி ட்ரீயை வரையுங்கள். தாத்தா, பாட்டியின் தாத்தா, பாட்டி அல்லது அம்மா, அப்பாவிலிருந்து அந்த மரத்தில் பெயர்களைக் குறிப்பிடுங்கள். ஒவ்வொருவரைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். தெரியாத விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மிகவும் சுவாரசியமான இந்தக் குடும்ப வரைபடத்தை வரைந்து, விவாதம் செய்து பாருங்கள். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உங்கள் குடும்பத்தின் வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்கும்.