நீங்களே செய்யலாம்: தீப்பெட்டியில் ஜிக்குபுக்கு...

நீங்களே செய்யலாம்: தீப்பெட்டியில் ஜிக்குபுக்கு...
Updated on
1 min read

ஜிக்குபுக்கு… ஜிக்குபுக்கு… என சத்தம் போட்டுக்கொண்டே செல்லும் ரயில் உங்களுக்குப் பிடிக்குமல்லவா? விளையாடுவதற்கு அதைப் போல ஒரு ரயிலைச் செய்துபார்ப்போமா?

தேவையான பொருள்கள்:

வெற்றுத் தீப்பெட்டிகள் 5, பொத்தான்கள் கொஞ்சம், மெல்லிய கம்பித் துண்டு ஒன்று, புகைபோக்கி செய்ய சிறிய காகிதத் துண்டு, புகை செய்ய கொஞ்சம் பஞ்சு, தீப்பெட்டிகளில் ஒட்டுவதற்கு காகிதம், பசை, பேனா.

செய்முறை:

1. காகிதத்தை ஐந்து தீப்பெட்டிகளிலும் ஒட்டிக்கொள்ளுங்கள்.

2. முதலில் இடம்பெறும் தீப்பெட்டியின் மேலே சிறிய துளையைப் போட்டுக்கொள்ளுங்கள். புகைபோக்கிக்காகக் காகிதத்தைக் குழாய் போலச் சுற்றி அதை துளையில் பொருத்திக்கொள்ளுங்கள்.

3. இந்தப் புகைபோக்கியின் மேலே பஞ்சைக் கொஞ்சம் நுழைத்து புகை வருவது போல செய்து கொள்ளுங்கள்.

4. ஐந்து தீப்பெட்டிகளையும் கம்பியால் பிணைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தீப்பெட்டிக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி தேவை. எனவே கம்பியில் முடிச்சிட்டுக்கொள்ளுங்கள்.

5. தீப்பெட்டியில் பொத்தான்களைப் பொருத்திகொள்ளுங்கள். இதுதான் ரயிலின் சக்கரங்கள். தீப்பெட்டியின் பக்கங்களில் கதவுகளையும் சன்னல்களையும் வரைந்துகொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு அழகான ரயில் கிடைத்துவிட்டதா? அதை வைத்து உங்கள் நண்பர்களுடன் ஆசை தீர விளையாடுங்களேன்.

© Amrita Bharati, 2015

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in