Published : 01 Apr 2020 08:53 AM
Last Updated : 01 Apr 2020 08:53 AM

விடுமுறையில் என்ன செய்யலாம்?

புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியிருப்பீர்கள். புத்தகங்களின் சுவை எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருப்பீர்கள். இனி நீங்களே நினைத்தாலும் புத்தகங்கள் உங்களை விடாது!

இந்த வாரம் நடிப்பு. பேசக் கூடாது. நடித்து மட்டுமே காட்ட வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் வட்டமாக உட்கார்ந்துகொள்ளுங்கள். ஒரு பேனாவை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பேனாவை எழுதுவதற்குத்தானே பயன்படுத்துவோம். இப்போது எழுதுவதற்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று உங்கள் கற்பனையைத் தட்டிவிடுங்கள்.

பல சுற்றுகளில் பல்வேறுவிதமான யோசனைகள் கிடைத்திருக்கும். போதும் என்று தோன்றும்போது விளையாட்டை நிறுத்தி விடலாம். இப்படிப் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி விளையாடுங்கள்.

அடுத்து சூரியன் உதிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொருவரும் அவரவர் கற்பனையை வசனம் இன்றி நடித்துக் காட்ட வேண்டும். இந்த விளையாட்டின் மூலம் சூரியனின் முக்கியத்துவம் புரியும். இதையே மாற்றி, சூரியன் மறையாமல் இரவே வராவிட்டால் என்ன ஆகும் என்றும் நடித்துக் காட்டலாம்.

அடுத்து, நீங்கள் படித்த ஒரு சுவாரசியமான கதையை எடுத்து, அதை நாடகமாக உருவாக்குங்கள். இதில் வீட்டில் உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். வசனங்கள் பேசி நடிக்க வேண்டும். இந்த நாடகத்தை நீங்களே உருவாக்கும்போது, நீங்கள் இயக்குநராக மாறுகிறீர்கள். வசனம் எழுதவும் தெரிந்துவிடுகிறது. கதை என்ற வடிவத்தை நாடகம் என்ற இன்னொரு வடிவமாக மாற்றும் திறமையாளராக மாறிவிடுகிறீர்கள்.

அடுத்து நாடகம் பற்றிய உங்களுடைய அனுபவங்களை மாயா பஜாருக்கு எழுதி அனுப்புங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x