

கை விரல்களில் ரப்பர் பேண்டை மாட்டி நிறைய விளையாடி இருப்பீர்கள். நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் ஒரு ரப்பர் பேண்டை மாட்டி, அதை மோதிர விரலுக்கும் சுண்டு விரலுக்கும் மாற்ற முடியுமா? இந்த மேஜிக்கைக் கற்றுக் கொண்டால் உங்களால் ரப்பர் பேண்டை விரலுக்கு விரல் மாற்ற முடியும். செய்து பார்க்கிறீர்களா?
என்னென்ன தேவை?
தரமான ரப்பர் பேண்ட்
எப்படிச் செய்வது?
l ஒரு ரப்பர் பேண்டை இடது கையின் ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலில் மாட்டிக் கொள்ளுங்கள்.
l இப்போது உங்கள் பக்கமாகக் கை விரலை விரியுங்கள். மாட்டியிருக்கும் ரப்பர் பேண்டை வலது கை விரலால் கொஞ்சம் இழுங்கள்,
l இழுத்த பிறகு, கட்டை விரலைத் தவிர நான்கு விரல்களையும் ரப்பர் பேண்டுக்குள் விட்டுக்கொள்ளுங்கள்.
l விரல்களை உள்பக்கமாக மடித்துக்கொள்ளுங்கள்.
l இப்போது விரல்களை விரியுங்கள். ஆள்காட்டி விரல், நடு விரலில் மாட்டப்பட்ட ரப்பர் பேண்ட், மோதிர விரல் மற்றும் சுண்டு விரலுக்கு ரப்பர் மாறி விடும்.
இதுவே இந்த மேஜிக்கின் ரகசியம். இதைப் பலமுறை பயிற்சி செய்து பார்த்து இந்த மேஜிக்கைச் செய்து, உங்கள் நண்பர்களை அசத்தலாம்.