Published : 16 Oct 2019 12:00 PM
Last Updated : 16 Oct 2019 12:00 PM

பள்ளி உலா

அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி, வேலூர்

1965-ம் ஆண்டு இருபாலர் உயர்நிலைப் பள்ளியாக இருந்து, பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டு, 1986-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 780 மாணவியர் கல்வி பயின்றனர். தற்போது 1,615 மாணவியர் கல்வி பெற்று வருகின்றனர்.

1999-ம் ஆண்டு தமிழகத்திலேயே முதன் முறையாகக் கணினிப் பயிற்சி அளிக்கும் அரசு பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் ’நமக்கு நாமே’ திட்டத்தின் கீழும், பள்ளி கட்டிடக்குழுவின் சார்பிலும் உலக நல்லிணக்க அறக்கட்டளை மூலமும் வகுப்பறைகள் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளன.

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி ஆய்வகங்கள் இருக்கின்றன. இணைய சேவையுடன் அனைத்துப் பாடங்களையும் கணினி வழியாகவும் எல்சிடி புரொஜெக்டர் மூலமும் கல்வி பெறும் வசதி இருக்கிறது. மாநில அளவில் சிலம்பத்திலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு, பரிசுகளைக் குவித்து வருகிறார்கள் இந்தப் பள்ளி மாணவியர்.

ஜுனியர் ரெட்கிராஸ், நாட்டு நலப்பணி திட்டம் போன்றவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சிறந்த தேர்ச்சி விழுக்காட்டினையும் அளித்து வருகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என மூன்று தரப்பினரும் ஒத்துழைப்பதால் சிறப்பாகக் கல்வி சேவையை ஆற்றி வருகிறது இந்தப் பள்ளி.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 1-3 வார்டு, உத்திரமேரூர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்திர மேரூரில் 1961-ம் ஆண்டு காமராஜரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பெருமை இந்தப் பள்ளிக்கு உண்டு. 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியும் 6-7-ம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழிக் கல்வியம் 8-ம் வகுப்பு தமிழ்வழிக் கல்வியும் நடைபெற்று வருகிறது.

பள்ளியின் செயல்பாடு களைப் பொது மக்கள் பார்க்கும் விதத் தில் ஃபேஸ்புக், பிளாக்ஸ்பாட் மூலம் செய்திகளை வெளியிட்டு வருகிறது. காற்றோட்டம் மிக்க வண்ணமய மான ஸ்மார்ட் வகுப்பறைகள், ஸ்மார்ட் டிவி, தூய்மையான கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அனைத்து வகுப்பறைகளிலும் மின்விசிறி போன்ற வசதிகள் இங்கே இருக்கின்றன.

சர் ஐசக் நியூட்டன் அறிவி யல் மன்றத்தின் சார்பாக அறிவியல் கண்காட்சி, கருத்த ரங்கம், போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் வெளிக்கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அறிவியல் செயல்பாட்டில் சிறந்து விளங்கியமைக்காக காஞ்சி முத்தமிழ்ச் சங்கம் சார்பில் ’நாளைய கலாம்’ விருதினை 7-ம் வகுப்பு மாணவர் ரா. பிரவீன்குமார் பெற்றார்.

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தால் நடத்தப்படும் புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் இந்தப் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளனர். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவி சி. கலையரசி ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, இளம் விஞ்ஞானி பட்டம் பெற்று, பள்ளிக்குப் பெருமைத் தேடித் தந்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மன்றங்கள் மாதந்தோறும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x