அறிவியல் மேஜிக்: காற்றுக்கு எடை உண்டா?

அறிவியல் மேஜிக்: காற்றுக்கு எடை உண்டா?
Updated on
1 min read

மிது கார்த்தி

காற்றுக்கு எடை உண்டு என்பதைப் படித்திருப்பீர்கள். கண்ணால் பார்க்க முடியாத காற்றுக்கு எடை உண்டு என்பதை நிரூபிக்க, ஒரு சோதனை செய்து பார்த்துவிடலாம்.

என்னென்ன தேவை?

குச்சி
நூல்
2 பலூன்கள்
குண்டூசி

எப்படிச் செய்வது?

# இரண்டு பலூன்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை ஒரே அளவில் ஊதுங்கள்.
# இரண்டு பலூன்களிலும் ஒரே அளவில் நீளமான நூலை கட்டிக்கொள்ளுங்கள்.
# குச்சியைக் கிடைமட்டமாக வைத்து பலூன்களை இரு முனைகளில் தனித்தனியாகக் கட்டி, தொங்கவிடுங்கள்.
# இது தராசு போல இருக்கும். பிடித்துக்கொள்ள வசதியாகக் குச்சியின் நடுவே நூலைக் கட்டிக்கொள்ளுங்கள்.
# இப்போது தராசு போல நடுவில் உள்ள நூலை தூக்கிப் பிடியுங்கள். இரண்டு பலூன்களும் ஒரே அளவில் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
# உங்கள் நண்பரை, குண்டூசியைக் கொண்டு ஒரு பலூனை உடைக்கச் சொல்லுங்கள். இப்போது நடப்பதைக் கவனியுங்கள்.
# பலூன் உடைந்த முனை மேல் நோக்கியும் காற்றுள்ள பலூன் உள்ள முனை கீழ் நோக்கியும் இருப்பதைக் காணலாம்.

காரணம்

பலூன்கள் இரண்டும் சம எடையில் இருந்ததால், இரண்டும் ஒரே அளவில் ஆடிக்கொண்டிருந்தன. ஒரு முனையில் உள்ள பலூன் உடைந்தவுடன் காற்று வெளியேறிவிடுவதால், அந்த முனையில் எடை இன்றி மேல்நோக்கிச் சென்றுவிடுகிறது. இதன் மூலம் காற்றுக்கும் எடை உண்டு என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

ஓவியம்: வாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in