நீங்களே செய்யலாம்: குட்டி வீடு

நீங்களே செய்யலாம்: குட்டி வீடு
Updated on
1 min read

கிராமங்களுக்குச் செல்லும்போது குடிசையைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதைப் போன்ற குடிசையைச் செய்வோமா?

தேவையான பொருள்கள்:

மெல்லிய கம்பி

பழுப்பு, கருப்பு வண்ண பெயிண்ட்

மஞ்சள் நிற ஸ்டிராக்கள் 12 30 செ.மீ. நீளம், 10 செ.மீ. அகலம் கொண்ட தடித்த செவ்வக வடிவக் காகிதம்

பசை.

செய்முறை:

1. படத்தில் காட்டியது போல் செவ்வக வடிவக் காகிதத்தின் நடுவில் வாசலை வரைந்துகொள்ளுங்கள். வாசல் பகுதியில் கறுப்பு நிறத்தையும், ஏனைய பகுதியில் பழுப்பு நிறத்தையும் பூசிக்கொள்ளுங்கள்.

2. இப்போது செவ்வக வடிவக் காகிதத்தை உருளைபோல் உருட்டி, இரு புறங்களையும் ஒட்டிக்கொள்ளுங்கள்.

3. இப்போது 12 ஸ்டிராக்களை எடுத்துகொள்ளுங்கள். அவற்றின் முனைப் பகுதிகளையும் மெல்லிய கம்பியால் கட்டிக்கொண்டு அவற்றை படத்தில் காட்டியபடி உருளையின் மீது தூக்கி நிறுத்துங்கள்.

இப்போது அழகிய குடிசை வீடு ஒன்று உங்கள் கைகளில் உள்ளதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in