

எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
உயர்ந்த நாவல் மரமொன்று
கிளை விரித்து நிற்குதே
நிழல் பரப்பி நிற்குதே!
பழம் பழுக்கும் காலமிது
அழகழகாய்த் தொங்குதே
அணிலும் கிளியும் அங்குவந்து
பழம் கொறித்து உண்ணுதே!
காற்று வீசிக் கிளையசைந்து
சில பழங்கள் உதிருதே
கருநீல நிறத்தில் சில
மண்ணில் விழுந்து கிடக்குதே!
அன்புத் தங்கை ஆசையாக
நாவல் பழம் கேட்டதும்
மரத்தடிக்கு ஓடி நான்
கண்டேன் ஒரு பழத்தையே!
அதை எடுக்கப் போகையில்
பழம் பறந்து போனதே
நாவல் பழம் அதுவல்ல
கருவண்டெனப் புரிந்ததே!!