

விஸ்வக்சேனா குளோபல் பள்ளி,
போளிவாக்கம், திருவள்ளுர் மாவட்டம்.
தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் 2013-ம் ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் மூலம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தொலைநோக்குச் சிந்தனையுடனும் அறிவியல் மனப்பான்மையுடனும் மாணவர்கள் நடக்க, சிறப்பான முறையில் கற்பித்தல் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சியைப் பெற்றுவருகிறது. யோகாவும் இசையும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்புப் பயிற்சியாக அளிக்கப்படுகிறது. தற்காப்புக் கலையான கராத்தே, நடனம், செஸ் போன்றவற்றுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்குத் தனி கவனம் செலுத்தி, பயிற்சி அளிப்பதால் பல்வேறு போட்டிகளில் வெற்றிவாகை சூடி வருகின்றனர். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை XSEED பாடத் திட்டத்தின் மூலமும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை NCERT பாடத்திட்டத்தின் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. NEET முதலான சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
தனி மனித ஆளுமைப் பண்புகளை வளர்க்க உதவும் விதமாகவும் கல்வி வழங்கப்படுகிறது. மாணவர்கள் பன்முகத் திறனோடு வளர்வதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இயற்கைச் சூழலில் காற்றோட்ட வகுப்பறைகளுடன் கூடிய விளையாட்டுத் திடலும் இங்கே இருக்கின்றன.
எல்லை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மாவட்டம்.
1954-ம் ஆண்டு 50 மாணவர்கள், 2 ஆசிரியர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்தப் பள்ளி. பின்னர் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
காற்றோட்டமான வகுப்பறைகள், கணினிக் கூடம், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
பள்ளியில் ஆண்டு விழா, தேசிய விழாக்களின்போது பல்வேறு தலைப்புகளில் பேச்சு, ஓவியம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, உள்ளூர் பிரமுகர்கள் மூலம் பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்படு கின்றன.
மாணவர் களுக்குச் சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ஆடல், பாடல், மதிப்புக் கல்வி, நன்நெறிக் கல்வி, உடற்கல்வி, ஆங்கில இலக்கணம், அறிவியல் ஆய்வு, கணிதத் திறன் ஆகியவற்றுக்குப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
வட்டார, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்று வருகிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள். மாணவர்களின் ஆளுமைத்திறன் வளர்வதற்கும் அச்சத்தைப் போக்கு வதற்கும் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் வழங்கப்படு கின்றன.