பள்ளி உலா

பள்ளி உலா
Updated on
2 min read

சென்னை தொடக்கப் பள்ளி,
எம்.எம்.டி.ஏ. II, ‘ஓ’ பிளாக், சென்னை.

எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படும் இந்தப் பள்ளியில் 500 மாணவர்கள் படிக்கிறார்கள். காற்றோட்டமான வகுப்பறைகள், தூய்மையான தண்ணீர், சுத்தமான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இறைவணக்கக் கூட்டம் மாணவர்களால் சிறப்பாக நடத்தப்படுகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற கற்றல் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தேசிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. ’சமக்கிரஹ சிக்‌ஷா’ மூலம் தூய்மை இந்தியா தொடர்பான பல போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகப் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் பி. சிவனேஷ் தொடர்ந்து 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். ஓவியப் போட்டியில் எஸ். மகேஸ்வரி மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளி செயல்பாடுகள் பெற்றோரால் கண்காணிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பள்ளிக்கு உதவி செய்து வருகின்றன.

விஸ்வக்சேனா வித்ய விகாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,
போளிவாக்கம், திருவள்ளூர் மாவட்டம்.

தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் எதிர்கால லட்சியத்தை எளிதில் அடையும் வகையில் ஐஐடி, ஜெஇஇ, நீட் போன்ற தேர்வுகளுக்குச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேசிய திறனாய்வுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

விளையாட்டுத் திறன்களை வளர்க்கும் வகையில் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று, பரிசுகளைப் பெற்று வருகின்றனர். மாநில அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர் இந்தப் பள்ளி மாணவர்கள்.

கல்வி மட்டுமல்லாது பிற திறன்களை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. கராத்தே, நடனம், ஓவியம், செஸ், சிலம்பம், இசை போன்றவற்றுக்குச் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.
சாரண, சாரணியர் இயக்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. மாவட்ட அளவில் சாரண, சாரணியர்களுக்கான தலைமை இடமாகவும் இந்தப் பள்ளி இயங்கி வருகிறது.

10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று வருகிறது. ஜிபிஎஸ் தொழில்நுட்ப வசதியுடன கூடிய நவீன பேருந்து வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வசதியான வகுப்பறைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in