பள்ளி உலா!

பள்ளி உலா!
Updated on
2 min read

எஸ்.டி. ஈடன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வடலூர்.

மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை அளிக்க வேண் டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி, 35 ஆண்டுகளாகச் சிறப்பாக இயங்கி வருகிறது. கல்வியோடு விளையாட்டுப் போட்டிகளிலும் மாவட்ட, மாநில அளவில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.

பொதுத்தேர்வுகளில் 2 முறை, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது இந்தப் பள்ளி. யோகாவில் அகில இந்திய அளவில் சாம்பியன்ஷிப் பெற்றுள்ளது. கராத்தேவில் தமிழக அளவில் நடைபெற்ற போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தி ருக்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள்.

விளையாட்டுத் துறை சார்பாக நடை பெறும் மேசைப்பந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றனர் இந்தப் பள்ளி மாணவர்கள். இறகுப்பந்து போட்டிகளில் மண்டல அளவிலும், கைப்பந்து, தடகளப் போட்டிகளில் வட்டார அளவிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

பரதம் மற்றும் பிற நடனங்களுக்கு இலவசமாகப் பயிற்சியளிக்கப்படுகிறது. மாதத்துக்கு ஒருமுறை கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் கண்காட்சியில் மினி ஏரோபிளேன், ரோபோ செய்து மாணவர்கள் அசத்தினார்கள்.
பள்ளி நிகழ்வுகளைப் பெற்றோர் அறிந்துகொள்ளும் விதத்தில் இணைய தள வசதியும், கைபேசியில் பிரத்யேக செயலியும், பள்ளி வாகனங்களை வீட்டில் இருந்தே பார்க்கும் ஜிபிஎஸ் வசதியும் இருக்கின்றன. சிறப்புக் கையெழுத்துப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஏசியன் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி,
சாலவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

கிராமப்புற மாணவர்களும் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 2007-ம்
ஆண்டு 22 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. வசதியான வகுப்பறைகள், பெரிய விளையாட்டு மைதானம் போன்றவை இங்குள்ளன.

மாணவர்களின் திறனைக் கல்வி யில் செயல்படுத்த ஆண்டுதோறும் ‘டேலண்ட் டே’ நடத்தப்படுகிறது. மாணவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறைகொண்டு ‘ஊட்டச்சத்து தினம்’ கொண்டாடப்படுகிறது.
அரசு விழாக்கள் சிறப்பான முறை யில் நடத்தப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்பொழிப் பாடத்திட்டத்துடன் அரசின் திட்டங் களும் இங்கே செயல்படுத்தப் படுகின்றன. பொது அறிவு, கணினி கல்வியும் அளிக்கப்படுகிறது.

கராத்தே, யோகா, வில் அம்பு, மட்டைப் பந்து, கீபோர்டு, டிரம்ஸ், துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது. மாணவர்களின் தனித் திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக ஓவியம், பேச்சு, கையெழுத்து, திருக்குறள் ஒப்பித்தல் போன்ற பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. ’திருக்குறள் செல்வன்’ என்ற பட்டத்தை இந்தப் பள்ளி மாணவர் ஒருவர் பெற்று, பள்ளிக்குப் பெருமைத் தேடித் தந்திருக்கிறார்.

அப்துல்கலாமின் பிறந்தநாள் அன்று இல்லம் தோறும் மரம் நடும் பணி நடைபெறுகிறது. ஓராண்டாக சிபிஎஸ்இ கல்வித் திட்டமும் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. வாகன வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.
‘மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது’ என்பதற்கு ஏற்ப, கற்பிப்பதில் புதிய நுட்பங்கள் இங்கே புகுத்தப்படுகின்றன.
400 மாணவர் கள், 20 ஆசிரியர் களுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்தப் பள்ளி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in