நீங்களே செய்யலாம்: பேப்பர் கப்பில் குட்டி பொம்மை

நீங்களே செய்யலாம்: பேப்பர் கப்பில் குட்டி பொம்மை
Updated on
1 min read

பேப்பர் கப்பை வைத்து டீ, காபி மட்டுமே குடிக்கமுடியும் என்று நினைக்கா தீர்கள். நிறைய பொம்மைகளைக்கூடச் செய்யலாம். பேப்பர் கப்பில் பொம்மை செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறோம். செய்து பார்க்கிறீர்களா?

என்ன தேவை?

இரண்டு பேப்பர் கப்புகள், கண்மணிகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறப் வண்ணம், பிரஷ், பொத்தான்கள், கத்தரிக்கோல், பசை.

எப்படிச் செய்வது?

ஒரு பேப்பர் கப்பை எடுத்து அதற்குக் கருப்பு சாயத்தைப் பூசுங்கள். கொஞ்ச நேரம் காய வையுங்கள். கப்பின் மேற்பகுதியில் கண்மணிகளை ஒட்டுங்கள். இவைதான் பொம்மையின் கண்கள்.

இப்போது இன்னொரு பேப்பர் கப்பை எடுத்து அதற்குச் சிவப்பு அல்லது உங்களுக்குப் பிடித்த நிறத்திலான சாயத்தைப் பூசுங்கள். அதை சிறிது நேரம் காய வையுங்கள். பிறகு பேப்பர் கப்பின் வாய்ப் பகுதியில் ஒரு செ.மீ. இடைவெளியில் படத்தில் காட்டியபடி சீராக வெட்டுங்கள்.

வெட்டிய சிவப்பு நிற கப்பைக் கருப்பு கப் மேலே படத்தில் காட்டியது போலக் கவிழ்த்து வையுங்கள். இதுதான் பொம்மையின் தொப்பி.

தொப்பியை அழகுப்படுத்த அதில் பொத்தான்களை ஒட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது பேப்பர் கப் பொம்மை உங்களுக்குக் கிடைத்துவிட்டதா? அதை வைத்து நீங்கள் விளையாடலாமே!

படங்கள்: மோ.வினுப்பிரியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in