

எஸ். ஜெயகாவியம் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி, சாலவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்
‘கல்வி என்பது வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பதாக இருக்க வேண்டும். ஆழமாகக் கற்பதால் அறிவு வளரும்’ என்ற விவேகானந்தரின் கூற்றுக்கு ஏற்ப, 10 ஆண்டுகளாகச் சேவை மனப்பான்மையுடன் இயங்கி வருகிறது.
விசாலமான டிஜிட்டல் வகுப்பறைகள், நவீன வசதிகள் இங்கே இருக்கின்றன. ஏழை மாணவர்களும் கல்வி பயிலும் வகையில் இலவசமாகவும் குறைந்த கல்வி கட்டணத்துடனும் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.
2019-20 கல்வி ஆண்டு முதல் ’லீட் ஸ்கூல்’ என்ற அமைப்பின் மூலம் இணைந்து, சிபிஎஸ்சி பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாதந்தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டு, மாணவர்களின் திறன்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. யோகா, கராத்தே, நடனம், ஆங்கிலப் பேச்சு போன்றவற்றுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆசிரியர்களின் திறமைகளையும் ஊக்கப்படுத்தி, அவர்களுக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்ப்பதற்கும் மேடை பயத்தைப் போக்குவதற்கும் தினமும் இறைவணக்கத்தின்போது மாணவர்கள் மூலமே நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் கற்கும் திறனை அடிப்படையாக வைத்து, 3 பிரிவுகளாகப் பிரித்து, தனிக்கவனம் செலுத்தி கற்றலை மேம்படுத்திவருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் துரித உணவு தவிர்க்கப் பட்டிருக்கிறது. இதனால் மாணவர்கள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடு கிறார்கள். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளியாகவும் திகழ்கிறது.
எஸ்.கே.டி. மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி, தோட்டப்பாளையம், வேலூர்.
1995-ம் ஆண்டு ஸ்ரீ குலசேகர பஜனை கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ், 45 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 500 மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயின்று வருகின்றன்ர். 25 ஆண்டுகளாக ஏழை மாணவர்களின் நலன் கருதி, கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.
காற்றோட்டமான வகுப்பறைகள், கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, விளையாட்டு மைதானம் போன்றவை இங்கே இருக்கின்றன.
யோகா, அபாகஸ் போன்றவை திறமை வாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகளைப் பெற்று, பள்ளிக்குப் பெருமை தேடித் தந்துகொண்டிருக்கிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள். இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.
’குறைந்த கட்டணம், நிறைந்த கல்வி’ என்ற நோக்கத்தில் ‘Spiritual, Simplicity, Sacrifice’ என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது இந்தப் பள்ளி.