பொம்மை செய்வோம்: பறக்கும் பிளாஸ்டிக் வண்டு

பொம்மை செய்வோம்: பறக்கும் பிளாஸ்டிக் வண்டு
Updated on
1 min read

வீட்டில் தேவையில்லாமல் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை என்ன செய்வீர்கள்? தூக்கி எறிந்துவிடுவோம் இல்லையா? அதையும்கூடப் பயன்படுத்த முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? அதில் அழகான வண்டுகள் செய்ய முடியும். வாருங்கள், செய்து பார்ப்போமா?

என்னென்ன தேவை

பிளாஸ்டிக் பாட்டில், பெயிண்ட் பிரஷ், சிறிய கத்தி, கண்மணிகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பெயிண்ட், பாட்டில் மூடி, பசை. (கத்தியைப் பெரியவர்கள் உதவியுடன் பயன்படுத்த வேண்டும்)

எப்படிச் செய்வது?

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அதன் அடிப்பாகத்தை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். வெட்டி எடுத்த அந்த அடிப்பாகத்தின் உட்புறமாகச் சிவப்பு நிறப் பெயிண்டைத் தீட்டிக்கொள்ளுங்கள். அதைச் சிறிது நேரம் காயவையுங்கள்.

காய்ந்த பிறகு வெளிப்புறமாகத் திருப்பி, படத்தில் காட்டியபடி கருப்பு நிற பெயிண்டால் சிறிய புள்ளிகளை இடுங்கள். அது பார்ப்பதற்கு வண்டின் உடம்பு போலவே தெரியும்.

இப்போது பிளாஸ்டிக் பாட்டிலின் மூடியை எடுத்துக் கருப்பு நிறப் பெயிண்டைத் தீட்டுங்கள். இதுதான் வண்டின் தலை.

இந்தத் தலையை வண்டின் உடம்பு போல உள்ள பிளாஸ்டிக்குடன் ஒட்டிக்கொள்ளுங்கள்.

பிறகு தலையில் கண்மணிகளை ஒட்டி வண்டுக்குக் கண்களை உருவாக்குங்கள்.

இரண்டு வத்திக்குச்சிகளை எடுத்து, அதன் முனையை மடக்கிப் படத்தில் காட்டியபடி வண்டின் முகத்தில் ஒட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது வண்ணமயமான வண்டு ஒன்று கிடைத்துவிட்டதா? அதைச் சுவரில் ஒட்ட வைக்கலாம் அல்லது வீட்டு உத்திரத்தில் உள்ள கொக்கியில் நூலில் கட்டித் தொங்க விடவும் செய்யலாம். பார்ப்பதற்கு வண்டு பறப்பது போலவே இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in