

கண்டுபிடி
மேலேயுள்ள பாம்புகள் வெளியே வர முடியாமல் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக் கின்றன. எந்தக் கூடையில் எந்தப் பாம்பு உள்ளது என்று கண்டுபிடியுங்களேன்...
விடுகதை
1. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
2. பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?
3. எட்டாத வெண்ணிலா எங்க வீட்டு அடுப்பிலே காயுது. அது என்ன?
4. ஆடி ஓய்ந்த பின் அம்மணி வருவாள். அவள் யார்?
5. இங்கிருந்து பார்த்தால் இரும்புக் குண்டு. எடுத்துப் பார்த்தால் இனிக்கும் பழம். அது என்ன?
6. எலும்பு இல்லாத மனிதன், கணுவில்லாத மரத்தில் ஏறுகிறான். அது என்ன?
7. காடு சிறுகாடு; அங்கே கூட்டம் பெருங்கூட்டம். அது என்ன?
8. இதயம் போல் துடிதுடிக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
க. ரம்யா, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சாத்தான்குளம், தூத்துக்குடி.
படப் புதிர்
ராஜா, ராதா, ராமு, ராஜி ஆகிய நால்வரும் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் நால்வரும் வெவ்வேறு பாதைகள் வழியே செல்ல விரும்புகிறார்கள். ஆனால் வீட்டுக்குச் செல்லும்போது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் செல்லும் பாதையும் ஒன்றையொன்று குறுக்கிடக் கூடாது. அவர்கள் எப்படிச் செல்லலாம் என்று வழி காட்டுங்கள் பார்ப்போம்.
படப்புதிர் - 2
பல இசைக் கருவிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு கருவி மட்டும் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. அந்த இசைக் கருவி எது எனச் சொல்லுங்களேன்.
வரிசையை நிரப்புக
தரப்பட்டுள்ள படங்கள் எப்படி வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து அதன் மூலம் கேள்விக்குறி உள்ள இடத்தில் என்ன படம் வரும் எனக் கண்டுபிடியுங்கள்.
எண் சொல்
இந்தக் கூட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?